வடக்கு நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட மீதமுள்ள 14 மாணவர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை தாக்கி, 700 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆயுதக் குழுக்கள் கடத்திச் சென்றுள்ளன.
கடத்தல் கும்பல்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினரின் இயலாமை, அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியுள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதி வடமேற்கு மாநிலமான கடுனாவில் உள்ள கிரீன்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் ஆயுதமேந்தியவர்கள் தாக்குதல் நடத்தினர். இதன்போது அவர்கள் ஒருவரைக் சுற்றது கொண்றதுடன் சில நாட்களில் 5 பேரைக் கொன்றனர்.
பல்கலைக்கழகத்தில் கடத்தப்பட்ட மாணவர்களில் 14 மாணவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் அதிபர் அறிவித்துள்ளார்.