இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்ட மூன்று வாரங்களில் கணக்கிடப்பட்டதில் இந்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
முதல் அலை உச்சத்தில் இருந்து பாதியாகக் குறைய ஆறு வாரங்கள் எடுத்தது என்றும் இரண்டாவது அலை மூன்று வாரங்களுக்குள் பாதியாகக் குறைந்திருப்பது மருத்துவத்துறையினருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைவிடவும் குறைவாக காணப்படுகிறது.
எனினும் தினசரி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அந்தளவுக்கு வேகமாகக் குறையவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மரண எண்ணிக்கை 18 சதவீதமே குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.