நாட்டில் மேலும் 1,521 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று (திங்கட்கிழமை) செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 347,310 பேருக்கு அஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 72,887 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை 739,499 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்ய தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 10,157 பேருக்கு செலுத்தப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை 26,821 ஆக அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நாட்டில் இதுவரை 1,691,562 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.