ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக் கொண்டே போக முடியாது அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ”கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் கொவிட் பரவுலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒருசிலர் மீறினாலும் அதனால் முழுப்பயன் கிடைக்காமல் போய்விடும். முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க தவறியதால்தான் 2ஆவது அலையை எதிர்கொள்ள வேண்டியதாகியது.
மருத்துவ கட்டமைப்புக்கும் நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும்.
எத்தனையோ புதிய திட்டமிடுதல்கள் பல்வேறு துறைகளில் செய்ய வேண்டும். அதற்கு தடையாக உள்ள கொவிட் என்னும் தடுப்பு சுவரை விரைவில் உடைத்து நொறுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.