அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்ட மொரட்டுவ மாநகர சபையின் முதல்வரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை மனுமீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக சமன்லால் பெர்னாண்டோ மே 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மொரட்டுவ மாநகர சபையின் முதல்வருக்கு ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.