பர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து, இரண்டு இளைஞர்கள் உட்பட 6 பேர் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 13 வயதான சிறுவன் ஒருவன் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் செஷயரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 33, 35, 36 மற்றும் 38 வயதுடைய நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பிரேத பரிசோதனையில் சிறுவன் மார்பில் குத்தப்பட்ட காயத்தினால் இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.



















