தனியான கிராம சேவையாளர் பிரிவை உருவாக்கி தாருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிடம் வலைப்பாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலைப்பாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு இணைதலைவருமான அங்கயன் இராமநாதனிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் தொகை இல்லாத கிராமமான பொன்னாவெளி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வலைப்பாடு கிராமத்தில் 400 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தை தனியான கிராம சேவையாளர் பிரிவாக மாற்றி தருமாறு குறித்த கலந்துரையாடலில் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்போது, வலைப்பாடு பங்கு தந்தை, மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். எல்லை நிர்ணய குழுவிடம் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என இதன் போது மக்களிடம் அங்கயன் இராமநாதன் குறிப்பிட்டிருந்தார்.