அயர்லாந்து டப்ளினில் கடந்த சனிக்கிழமை காணிக்கை மாதா அருட்சகோதரர்கள் சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் தெய்வேந்திரன் செபஸ்தியாம்பிள்ளை தனது நித்திய வாக்குத்தத்தத்தை டப்ளின் புனித சூசையப்பர் ஆலயத்தில் பெற்றுக்கொண்டார்.
இவர் இலங்கை வலைப்பாடு கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், அயர்லாந்தில் தனது இறையியல் பட்டப்படிப்பினை முடித்துத் தனதுபணியினைச் செய்து வருகின்றார்.
காணிக்கை மாதா அருட்சகோதரர்கள் சபையின் முதல் இலங்கை அருட்சகோதரர் என்பதுடன், ஆசிய நாட்டை சேர்த்த முதல் அருட்சகோதரனும் இவர் ஆவார்.