மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசிகளே சிறந்த முறை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில் இதுவரை 23 கோடி தடுப்பூசிக்கும் அதிகமான டோஸ்கள், மாநில, மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 21 கோடியே 71 இலட்சத்து 44 ஆயிரம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் ஒரு கோடியே 64 இலட்சத்து 42 ஆயிரத்து 938 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.