இந்திய கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு இப்போது இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது.
சமீபத்திய தரவு பி 1.617.2 மாறுபாடு இப்போது டெல்டா என குறிப்பிடப்படுகிறது. 315 உள்ளூர் அதிகார பகுதிகளில் 67 இல் (21சதவீதம்) ஆதிக்கம் செலுத்துகின்றது.
அங்கு மே 22ஆம் திகதி உடன் முடிவடைந்த இரண்டு வாரங்களுக்கு குறைந்தது ஐந்து தொற்றுகள் கண்டறியப்பட்டன.
இதன் பொருள், அந்த பகுதிகளில், மாறுபாடு 51 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ளது.
மொத்தத்தில், வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட்டின் மிக சமீபத்திய தரவுகளின்படி, 230 உள்ளூர் அதிகாரிகள் (73சதவீதம்) குறைந்தது ஒரு தொற்றையாவது அறிக்கை செய்துள்ளனர்.
இதற்கிடையில், லண்டன் மற்றும் தென்கிழக்கில் வைரஸ் தொற்றுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன.