ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், குரேஷியாவின் மரின் சிலிக்கை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், 6-2, 2-6, 7-6, 6-2 என்ற செட் கணக்குகளில் ரோஜர் பெடரர், வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், உருகுவேயின் பப்லோ கியூவாசுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் நோவக் ஜோகோவிச், வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், அமெரிக்காவின் டொமி போலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனில் மெட்வேடவ், 3-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால், பிரான்ஸின் ரிச்சர்ட் கேஸ்கெட்டுடன் மோதினார்.
இப்போட்டியில் 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் ரபேல் நடால், வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ கோஃப், வாங் கியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில் கோகோ கோஃப், 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.
விறுவிறுப்பாக நகர்ந்த இப்போட்டியில், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் சோபியா கெனின், சகநாட்டு வீராங்கனையான ஹேய்லி பெப்டிஸ்ட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சோபியா கெனின், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.