இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதாக உறுதி அளிப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடிய அவர், இவ்வாறு தெரிவித்தாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் தலைமை செய்தித் தொடர்பாளர் சைமன் சாண்டர்ஸ், ‘ உலகில் கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார தேவைகள் குறித்தும் மோடியிடம், கமலாஹாரிஸ் எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்வதாக, கமலாஹாரிஸ் உறுதியளித்துள்ளதாகவும், கொரோனாவுக்கு பின் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.