கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் 7 ஆம் திகதிவரை அமுலில் உள்ள ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், அதனை நீட்டித்து கர்நாடாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா தொற்று பரவல் குறைவது போல் தெரிந்தாலும், கிராமங்களில் அதிகரித்து வருவதால் ஜுன் மாத் 7 ஆம் திகதிவரை அமுலில் உள்ள முழு ஊரடங்கு 14 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு முதல் கட்டமாக ஆயிரத்து 250 கோடி ரூபாய் அளவுக்கு வெவ்வேறு பிரிவினருக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இரண்டாம் கட்டமாக மீனவர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு 500 கோடி ரூபாயில் சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார்.