மக்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சமையல் எண்ணெய் 20 சதவீதம், சூரிய காந்தி எண்ணெய் விலை 56 வீதம், கடுகு எண்ணெய் விலை 42 வீதம், வனஸ்பதி 42 வீதம், பாமாயில் 52 வீதம் பருப்பு வகைகளன் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
அரசி, சர்க்கரை, உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வெளிச்சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த விலை நிறுத்தல் நிதி ஏற்படுத்தினார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தார். எனவே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ள கடத்தலையும், பதுக்கலையும் தடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.