கர்நாடகாவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் விகிதம் 12 சதவீதமாக காணப்படுகின்றது. இது 5 சதவீதத்திற்கு வரும்போது ஊரங்கை தளர்த்துவது குறித்து ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள், அரச மானியம் பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், திரைத்துறை, தூர்தஷனின் அமைப்பு சாரா தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், மசூதிகளில் பணிபுரிபவர்கள், ஆஷா மருத்துவ ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 62 இலட்சம் பேருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.