வடக்கு புர்கினோ பசோவில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதமேந்தியவர்கள் நடந்தீய தாக்குதலில் 132 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குல் என அரசாங்கம் கூறுகிறது.
சோல்ஹான் என்ற கிராமம் மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீடுகளும் உள்ளூர் சந்தையும் எரிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை, ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் நாட்டில், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக புர்கினாபே ஜனாதிபதி ரோச் கபோர் அறிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த மற்றொரு தாக்குதலில், சோல்ஹானின் வடக்கே சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள தடரியத் கிராமத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மாதம், புர்கினோ பசோவின் கிழக்கில் நடந்த தாக்குதலில் 30 பேர் இறந்தனர் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.