சமூக ஊடக நிறுவனமான டுவிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய்யப்படும் என நைஜீரிய அரசாங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டுவிட்டரின் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அவ்வாறு செய்ய உத்தரவிடப்பட்ட பின்னர் மொபைல் போன் நெட்வேர்க்குகள் அணுகலைத் தடுத்தபோதும் சில பயனர்கள் தடையை மீறியும் பயன்படுத்தி வருகின்றனர்.
தளத்தின் விதிகளை மீறியதற்காக ஜனாதிபதி முகம்மது புஹாரியின் பதிவை டுவிட்டர் நீக்கிய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நைஜீரியாவில் சமூக ஊடக பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன, அங்கு தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் பரவியது, இது உண்யில் உலக வன்முறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என அரசாங்கம் கூறியது.
இந்த நடவடிக்கை நைஜீரியாவில் சுதந்திரமான பேச்சைக் கட்டுப்படுத்தும் எனக் கூறும் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சர்வதேசத்திடமிருந்து பரவலான கண்டனத்தையும் கொண்டு வந்துள்ளது.