ஹங்கேரிய தலைநகரில் ஒரு சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திட்டம் நாட்டின் உயர்கல்வியைக் குறைத்து சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளின் செல்வாக்கை அதிகரிக்கும் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரதமர் விக்டர் ஆர்பனின் வலதுசாரி அரசாங்கம் பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, புடாபெஸ்டில் சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக வளாகத்தை கட்டும் திட்டத்தை எதிர்த்து பாராளுமன்றம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புடாபெஸ்டில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக வளாகத்தின் கட்டுமானத்திற்கு சுமார் 1.8 பில்லியன் டொலர் செலவாகும் என்றும் இது 2019 ஆம் ஆண்டில் ஆர்பன் அரசாங்கம் தனது முழு உயர் கல்வி முறைக்கு செலவிட்டதை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.