கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்திற்கு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சோதனைகள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்போது 2,348 வாகனங்களில் பயணித்த 4,504 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக 54 வாகனங்களில் பயணித்த 107 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பாக நேற்று காலை 6.30 மணி முதல் காலை 9.30 மணி வரை விசேட கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.