அமெரிக்காவில் ஒருவருட காலத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 164பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த காலங்களில் நாளொன்றில் இலட்சக் கணக்கான பாதிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான உயிரிழப்பு என பதிவாகி வந்த நிலையில், தற்போது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்ததுபோல் நாளொன்றுக்கான பாதிப்பு குறைந்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த குறைவு ஏற்பட்டுள்ளது.
உலகளவில் கொவிட்-19 தொற்று மற்றும் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், இதுவரை மூன்று கோடியே 42இலட்சத்து பத்தாயிரத்து 782பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு இலட்சத்து 12ஆயிரத்து 366பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 54இலட்சத்து 75ஆயிரத்து 679பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 287பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு கோடியே 81இலட்சத்து 22ஆயிரத்து 737பேர் பூரண குணமடைந்துள்ளனர்.