இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த உயிரிழப்புகள் கடந்த மே மாதம் 17ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரை பதிவாகியுள்ளன என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் நேற்றைய தினம் கொரோனா உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை என்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 976 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து ஐயாயிரத்து 333ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 304 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், 36ஆயிரத்து 333 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.