போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் திருமணமான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடு அஞ்சு என அழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரியினுடைய சகோதரரின் மகன் மற்றும் அவரது மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 2 பணம் எண்ணும் இயந்திரங்கள், 4 கையடக்க தொலைப்பேசிகள், 5 கிராம் ஐஸ் போதைப்பொருள், மற்றும் 14 இலட்சம் ரூபாய் பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.