சீனாவில் 3 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு சீன நிறுவனமான சைனோவேக் நிறுவனம் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியொன்றை உருவாக்கியுள்ளது.
கொரோனாவேக் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தநிலையில், சைனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டாங் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனாவேக் தடுப்பூசி எப்போது அவசர பயன்பாட்டுக்கு வரும், எந்த வயதில் இருந்து இந்த தடுப்பூசியை வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசியை 2 கட்டங்களாக 3-17 வயதுள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு செலுத்தி சைனோவேக் நிறுவனம் பரிசோதித்து உள்ளது. அதில் இந்த தடுப்பூசி நம்பகமானது, செயல்திறன் மிக்கது என்று தெரியவந்துள்ளது.