வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000யை கடந்துள்ளதுடன் இதுவரை 17பேர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் வவுனியாவில், 1040பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் அதிகமானோர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.