தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளின் பலன்களை கண்டுகொள்ள சிறுது காலம் ஆகலாம் என்றாலும் மக்களின் நடமாட்டம் தொடர்ந்தால் கொரோனா கட்டுப்படுத்த முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் உதவியுடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்புவதாகவும் கூறினார்.
மேலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சட்டத்தால் மட்டும் முடியாது என குறிப்பிட்ட அவர் சுய ஒழுக்கம் தேவை என்றும் இல்லையெனில், நிலைமை மோசமாகிவிடும் என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 15 நாட்களுக்கு முன்பு மிக அதிகமான கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பின்னர் அந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.