இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 87 ஆயிரத்து 345 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 இலட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 73 இலட்சத்து 36 தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 13 இலட்சத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 2115 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.