இந்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கைகளின்படி, பெட்ரோல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியைமத்திய அரசு இரத்து செய்துள்ளது.
அதேவேளையில், அதிவேக டீசல் மீதான வரியை லிட்டருக்கு 11.5 ரூபாயாகவும், விமான எரிபொருள் மீதான வரியை லிட்டருக்கு 11 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள், அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதியான ஒக்டோபர் 31 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 2.5-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அதிவேக டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 8.5-லிருந்து ரூ. 11.5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை, விமான எரிபொருளுக்கான (ATF) சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED), லிட்டருக்கு 10.5 ரூபாயிலிருந்து 11 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நெருக்கடியின் பின்னணியில், பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றை உள்நாட்டில் தடையின்றி கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது இந்திய மத்திய அரசு 2026 மார்ச் 27 முதல் ஏற்றுமதி வரிகளை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.
















