மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்காக நேற்று (திங்கட்கிழமை) மாலை உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது.
அத்துடன் மேலும் மூன்று தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 21 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவை அரவே ஏற்றுக்கொள்ளும்.
இந்த பணிகளுக்காக ஏற்கனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வரவு செலவு திட்டத்தில் 45 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.