நாடு முழுவதும் இதுவரை 28 ஆயிரத்து 252 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பூஞ்சை தொற்று குறித்த விபரங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 28 ஆயிரத்து 252 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 86 சதவீதமானோர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 62.3 சதவீதமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 ஆயிரத்து 339 பேரும், குஜராத் மாநிலத்தில் 5 ஆயிரத்து 486 பேரும் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.