நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்று ஒரு நாள் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில், நேற்று நாடாளுமன்றில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.