நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையில் இருந்து எண்ணெய் கசிந்து சம்பவம் குறித்து விசாரிக்க எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இரு குழுக்களை நியமித்துள்ளார்.
மேலும் விசாரணை அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறித்த குழுவிற்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.
எண்ணெய் கசிவு காரணமாக ஏற்பட்ட சேதம் தொடர்பாக கணக்கிடப்படும் என்றும், நாளை முதல் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.