சிரியாவின் வான் பாதுகாப்பு படைகள் நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக சனா என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் லெபனான் வான்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு சிரிய விமான பாதுகாப்பு படைகள், வான்வழி இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, பல ஏவுகணைகளுக்கு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புச் செயலுக்கு சொத்து சேதம் மாத்திரம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 5 ஆம் திகதி சிரியாவின் லடாகியா நகரின் தென்மேற்கே இராணுவ நிலையங்கள் குறிவைத்து இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு தாயும் குழந்தையும் உள்ளடங்கலாக ஆறு பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.