இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரிவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு இலங்கையால் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணம் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது என்றும் இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.