ஓய்வூதியம் பெற்ற தாதியர்களை தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த ஆலோசனை வழங்கியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சந்திப்பின்போது, தாதியர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்கள் முகம் கொடுத்துவரும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.