அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் மேலாளர் இன்று (22) காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து முகாமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இரண்டு போட்டி குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்தும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















