மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்தால், ஜி.எஸ்.பி சலுகையை இழப்பதைப் பற்றி அரசாங்கம் கவலையடையத் தேவையில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களை கைது செய்வதை அரசாங்கம் நிறுத்தினால் ஜி.எஸ்.பி பிளஸைப் பெற முடியும் என்றும் அவரை சுட்டிக்காட்டினார்.
கடந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளை மட்டுமே பாதுகாத்து, ஜி.எஸ்.பி. பிளஸைப் பெறுவதற்கு மக்களுக்கு ஒரு சிறந்த நாளை உருவாக்கியது என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான நல்லாட்சி அரசாங்கம் என்ற அடிப்படையில் நாம் புதிய சட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின், மக்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
மேலும் அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்து, படிப்படியாக இராணுவ மயமாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் பட்சத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தானாகவே கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.