கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 95 இலட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 3 ஆயிரத்து 921 பேர், வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 74 ஆயிரத்து 305 ஆக காணப்படுகின்றது.
மேலும் வைரஸ் தொற்றிலிருந்து 2 கோடியே 81 இலட்சத்து 62 ஆயிரத்து 947 பேர் மீண்டுள்ளதுடன் 9 இலட்சத்து 73 ஆயிரத்து158 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.