நாட்டில் மேலும் 60 ஆயிரத்து 697 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதன்படி சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸை 26,187 பேரும் 32,732 பேர் இரண்டாவது டோஸை பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை 54 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ள அதேவேளை 1,724 பேருக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரை 355,412 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ள அதேநேரத்தில் 187,372 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
2,114 பேர் இதுவரை ஸ்பட்னிக் வி தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் அளவை 1,295,344 பேரும், ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் அளவை 64,986 பேரும் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.