ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வன் டெர் லெயன் இன்று போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா மீட்பு நிதிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளது.
750 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய நிதியிலிருந்து 16 பில்லியனையும் ஸ்பெயினுக்கு 140 பில்லியனையும் பெறும் திட்டங்களை போர்த்துக்கல் சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் குறித்த திட்டங்களுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வன் டெர் லெயன் அனுமதியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு நாடுகளும் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, இத்தாலிக்குப் பின்னர் குறித்த மீட்பு நிதியிலிருந்து ஸ்பெயின் இரண்டாவது பெரிய அளவை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.