கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வைப்பில் இடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்பின் படி சென்னை தலைமை செயலகத்தில் குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்படி தமிழக அரசு வழங்கும் 5 இலட்சம் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும்.
குழந்தைகளின் 18 வயது வரையில் இந்த பணம் அங்கேயே இருக்கும். 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.