உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை இலங்கைப் பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபம் ஏற்கனவே அதிகாரப்பூர்வ கடிதத்தில் சுகாதார அமைச்சகத்திற்கு மருந்துகளை வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் ஜுலை மாத தொடக்கத்தில் தடுப்பூசிகளைப் பெற முடியமென தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் அளவைப் பெற்றவர்களுக்கு இந்த அளவுகளைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் தற்போது தயாராகி வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பூசி தயாரிப்புகள் மற்றும் தளங்களுக்கு இடையிலான பரிமாற்றம் குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது பரிந்துரைகள் புதுப்பிக்கப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் கூறியுள்ளது.