சுகாதார உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் விவாடெக் மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கடந்த ஓர் ஆண்டுகாலமாக கொரோனா வைரஸால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாம் பல்வேறு துறைகளில் பல இடையூறுகளை கண்டுள்ளோம்.
இதனால் நாம் விரக்தி அடைய வேண்டியதில்லை. பதிலாக நாம் இந்த பிரச்சினைககுள்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு இதேநேரத்தில் உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தேடின. ஆனால் தற்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்’ எனத் தெரிவித்துள்ளார்.