கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு மத்தியப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப்படி மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் கொவிட் 19 நோயை உண்டாக்கம் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், வைரஸ் பரவலைக் தடுக்க பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்தார்.
எளிதில் பரவக்கூடிய டெல்டா வைரஸானது டெல்டா பிளஸ் என்ற வைரஸை தோற்றுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வைரஸ் அச்சம் தரக்கூடிய வகையில் இல்லை என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் திரிபுடன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு காரணமாக அமையலாம் எனவும் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.