காஷ்மீர் விவகாரத்தில் யதார்த்தத்தை மாற்ற முடியாது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி, சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அதில் காஷ்மீரில் போலி வீட்டு சான்றிதழ் உள்ளிட்டவை மூலம் பிராந்திய மக்கள் தொகை அமைப்பையே இந்தியா மாற்றுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து தற்போது வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.
இந்த விவகாரத்தில் எந்த கேள்வியும் யதார்த்தத்தை மாற்ற முடியாது. இதைப்போல எல்லை தாண்டிய பயங்கரவாதமும் ஏற்க முடியாது. அதை நியாயப்படுத்தும் செயலும் ஏற்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.