பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 27ஆவது லீக் போட்டியில், கராச்சி கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், கராச்சி கிங்ஸ் அணியும் லாகூர் குவலெண்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கராச்சி கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 54 ஓட்டங்களையும் கப்டில் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லாகூர் குவலெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி, அஹமட் டேனியல் மற்றும் ஹபீஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லாகூர் குவலெண்டர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கராச்சி கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ஹபீஸ் 36 ஓட்டங்களையும் டிம் ட்ராவிட் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கராச்சி கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், நூர் அஹமட் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் இமாட் வசிம் மற்றும் அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.