வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களின் அனுமதி இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக செயலணியின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்யபடுவதாக பல்வேறு தரப்பினரும் முறைப்பாடு செய்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.