தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்த பணியாற்றுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி.
தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்து பணியாற்றுவோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.