இங்கிலாந்தில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தங்கள் முதல் கொவிட்-19 தடுப்பூசி அளவை, முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
இதற்காக சுமார் 18 மில்லியன் குறுஞ்செய்திகள் 18 முதல் 20 வயதுடையவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனுப்பப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் வேகம், நம் நாட்டின் மிகப்பெரிய கூட்டு சாதனைகளில் ஒன்றாகும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தொற்றுநோய் வேகமாக பரவி வருவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) மேலும் 11,007 கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது பெப்ரவரி 19ஆம் திகதிக்குப் பிறகு மிக உயர்ந்த நாளொன்றுக்கான பதிவாகும்.
ஜூலை 19ஆம் திகதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் முதல் அளவு மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு இரண்டாவது அளவு வழங்க அரசாங்கம் ஒரு புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது.