அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை காணொலி வாயிலாக ஆரம்பித்து வைத்து உறையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘நாடு முழுவதும், ஒரு இலட்சம் முன்கள பணியாளர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
பாட திட்டத்தை நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
இது இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவுபெறுவதுடன், கொவிட்டை எதிர்த்து போராட பயிற்சி அளிக்கப்படும். 1500 ஒக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாட்டத்திலும் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்பூசி போடும்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எப்படி கையாளப்பட்டார்களோ அதேபோன்று, வரும் ஜுன் மாதம் 21 ஆம் திகதி முதல் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் கையாளப்படுவார்கள்.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.