சீனா தனது இராணுவ திறனை மிகவும் தீவிரமான மற்றும் நீடித்த விகிதத்தில் அதிகரித்து வருகிறது என அமெரிக்காவின் உயர்மட்ட குழுவின் கூட்டுப்படைத் தலைவரான ஜெனரல் மார்க் மில்லி, செனட் ஆயுத சேவைகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அமைதி மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் எங்கள் போட்டி மற்றும் தொழில்நுட்ப விளிம்பை நாங்கள் தக்க வைத்துக் கொள்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூட்டுப்படைத் தலைவரான இராணுவ ஜெனரல் மார்க் மில்லி, செனட் ஆயுத சேவைகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
தாய்வானில் இருந்து வரும் பிரச்சினைகள் மற்றும் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீன இராணுவ நடவடிக்கைகளில் மனித உரிமைகள் குறித்து இரு நாடுகளும் முரண்பட்ட நிலையில், அமெரிக்கா தற்போது பல வருடங்களாக சீனாவை அதன் தேசிய பாதுகாப்புக் கொள்கையின் மையத்தில் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.